முதல்வருக்கு அண்ணாமலை நன்றி

by Editor / 15-10-2021 09:09:38am
முதல்வருக்கு அண்ணாமலை நன்றி

கொரோனா தொற்று நடவடிக்கையையில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள், துணி கடைகள் எல்லாம் இயங்க அனுமதி அளித்த பின்னரும் கூட ஊரடங்ககின் தளர்வில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பாஜகவினர் அனுமதி அளிக்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

வணிக நிறுவனங்கள் தியேட்டர்கள் எல்லாம் திறந்திருக்கும் நிலையில் அங்கெல்லாம் கூட்டம் கூடவில்லையா? கொரோனா வராதா? கோயில்களை மட்டும் திறக்க அனுமதி மறுக்கிறீர்கள். இது இந்து விரோதம் என்று பாஜகவினர் தொடர்ந்து கண்டன குரல் எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், வாரத்தின் எல்லா நாட்களிலும் கோயில்கள் திறந்திருக்கவும், பக்தர்களுக்கு அனுமதி அளித்தும் தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதால், திருவிழா நாட்களில் தினமும் கோவிலுக்குள்ளே மூடி இருக்காமல் மக்களுக்காக எங்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து கோவில்களை திறக்கும் முடிவை வரவேற்கிறேன். நவராத்திரி எல்லா நாட்களிலும் திருக்கோயில்களை திறக்க அனுமதி அளித்த தமிழக முதலமைச்சருக்கும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் பாஜக சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.இதுகுறித்து தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், தர்மம் நியாயத்திற்கு புறம்பாக இந்து கோவில்களை வெள்ளி, சனி, ஞாயிறு பூட்டியது தவறு. இப்போது திறந்திருப்பது நமது போராட்டத்தின் வெற்றி. இதற்கு நன்றி அரசுக்கு தெரிவிப்பது ஒரு சம்பிரதாயம் மட்டுமே என்று தெரிவித்திருக்கிறார்.

 

Tags :

Share via