இன்று சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்மோடி

by Editor / 20-10-2021 11:06:54am
இன்று சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்மோடி

உத்தரபிரதேசத்தில் கோரக்பூர் குஷிநகர் புத்த மதத்தினரின் புனிதத்தலமாக கருதப்படுகிறது. இந்த இடத்தில் தான் புத்தர் தனது 80வது வயதில் படுத்த கோலத்தில் பிறவா நிலை அடைந்தார்.அதன் நினைவாக அந்த இடத்தில் மகாபரிநிர்வாண கோவில் நிர்மாணிக்கப் பட்டுள்ளது.

அந்த காட்சியை சிற்பமாக தத்ரூபமாக செதுக்கி வைத்துள்ளனர். உலகின் மற்ற முக்கிய நகரங்களில் அமைந்திருக்கும் புத்த மத யாத்திரை தலங்களுடன் இணைக்கும் வகையில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உத்தரபிரதேசத்திலிருந்து ஜப்பான், தென்கொரியா, இலங்கை, தாய்லாந்து, வியட்னாம், கம்போடியா, தைவான் நாடுகளில இருந்து யாத்திரிகர்கள் புத்தர் மகாபரிநிர்வாணம் அடைந்த தலத்தை தரிசிக்கிற வாய்ப்பு கிட்டும்.

இன்று இந்த சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இங்கிருந்து முதல் விமானமாக கொழும்புவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இங்கு வந்தடையும்.இந்த விமானத்தில் 100க்கும் மேற்பட்ட புத்த துறவிகளும், பிரமுகர்களும் வருகை தருகிறார்கள்.இந்த விமானத்தில் புத்தர் நினைவுச்சின்னங்களுக்கென ஒரு பிரத்யேகமான இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.புத்தர் நினைவுச்சின்னங்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்திய பிறகு போதிமரக்கன்றினையும் நடுகிறார். 

 

Tags :

Share via