இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு...

by Editor / 30-10-2021 07:25:11pm
இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு...

அரசுமுறை பயணமாக இத்தாலியின் ரோம் நகர் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பின் பேரில், மோடி நேற்றிரவு டெல்லியிலிருந்து இத்தாலி புறப்பட்டார். இந்தநிலையில் இன்று ரோம் நகரை சென்றடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் ரோம் பகுதியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

நாளை மற்றும் மறுநாள் அங்கு தங்கியிருந்து 16வது ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்கிறார். அப்போது கொரோனாவுக்கு பிறகான பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பருவநிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, உணவு பாதுகாப்பு  உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்துவது தொடர்பாக உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து  ஜி-20 நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்றும், பின்னர் இத்தாலி பிரதமருடன் இரு நாடுகள் தொடர்பான முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்கு இடையே மோடி போப் ஆண்டவரை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின்னர் அங்கிருந்து  வருகிற நவம்பர் 1, 2 தேதிகளில் இங்கிலாந்து செல்கிறார். கிளாஸ்கோவில் நடைபெறும் 26 கட்சிகள் மாநாட்டில் பங்கேற்ற பின், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்து இரு நாடுகள் தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுகிறார்.  

 

Tags :

Share via