ஆரோக்ய பானம் ?

by Admin / 30-10-2021 08:31:13pm
ஆரோக்ய பானம் ?

ஆரோக்ய பானம்

        அணுகுண்டு வீசி உலகத்தின் ஒட்டுமொத்த ஜீவராசிகளை அழித்தாலும் அழியாத ஒன்று புல்இனம்.

        தீப்பற்றி எரியும் அளவு காய்ந்திருந்தாலும் அதன் மீது ஒரு சொட்டு நீர் விழுந்தால், பச்சையாக நிறம் காட்டும் தாவர உயிரினம் புல்லாகும்.

        இந்து மத வழிபாட்டில், அதுவும் விநாயகர் வழிபாட்டில் முதன்மையான இடம் பிடித்திருப்பது அருகம் புல்லேநெல்லும் ஒரு புல் வகையே…. நெல்லு ஈடானதுதான் அருகம் புல்லும்அத்துனை உடல் ஆரோக்யம் தரும் மூலிகை குணம் அருகம் புல்லுக்கிருக்கிறது.

அற்புதம் செய்யும் அருகம்புல்

        புல்லினங்களில் நெல், கரும்பு, மூங்கில், கம்பு, சோளம், கேழ்வரகு என அனைத்தும் மனிதர்களுக்கு ஆரோக்கியமான உணவாகவும் விலங்குகளுக்கு அதன் தாள்களும் பாங்கர் போன்ற கரடிகளுக்கு மூங்கில் உணவாகவும் பயன்படுகின்றன. மூங்கில் அரிசி தமிழர்களின் ஆதிகால பாரம்பரிய உணவு தானியமாக இருந்துள்ளது. மூங்கிலில் விளைந்த முத்தை தமிழ்ச் சமூகம் தம் ஆபரணமாக அணிந்துள்ள செய்தி இலக்கியக் குறிப்புகளில் காணக்கின்றன….

       அத்தகைய புல்லினத்தில் அருகம்புல்லும் ஒன்றுஆனால், அருகம்புல்லில் எந்த விதமான தானியங்களும் விளைவதில்லை. ஆனாலும் அருகம்புல் தமிழர்களின் வாழ்வியலில் முதன்மையான இடம் பெற்றுள்ளது. இந்துமத இறை வழிபாட்டில் அருகம்புல்அதுவும் விநாயகர் வழிபாட்டில் அருகம்புல் மிக மிக முக்கியமான ஒன்றாகிறது.

      இத்தகுச் சிறப்பு வாய்ந்த அருகம்புல்லின் மருத்துவக் குணத்தை நாம் அறிய வேண்டியது அவசியம்.

      உடல் வெப்பத்தை மிதமான சூழலில் அதாவது குறிப்பிட்ட 98 டிகிரிக்கு மேல் செல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்சாதாரண உடல் சூடுதானே என்று அஜாக்கிரதையாக விட்டுவிடக் கூடாது…. சூடு உள்ளிருந்து சொல்லக்கூடியது உடல் வெப்பம் அதிகரிப்பதன் மூலம் உருவாகும் பிரச்சனைகள் ஏராளம். உடல் சூட்டை எழுமிச்சைசாறு, இளநீர், தர்பூசணி, கிர்ணிபழம் எனப் பழச்சாறு அருந்தி குறைக்கலாம்.. இல்லை, மோர், கம்பங்கூழ், கற்றாழைச் சாறு அருந்துவதன் வழியாகவும் கட்டுப்படுத்தலாம்இருப்பினும், எளிதாகக் கிடைக்க கூடிய அருகம் புல்லை காயவைத்துப் பொடியாக்கி பசு பாலிலிருந்து எடுக்கப்பட்ட வெண்ணெயுடன் கலந்து சாப்பிட உடல் வெப்பம் தணியும்.

        இன்றைக்கு உடல் பருமன் காரணமாக ஆண்களும் பெண்களும் மன அழுத்தத்திற்கு இலக்காகிறார்கள்.

        பெண்களுக்குப் பிரசவத்திற்குப் பிறகு இயல்பாகவே உடல் எடை அதிகரித்து விடுகிறது. இளைஞர்களுக்கு இன்றைய நவீன உணவான பர்கர், பீட்சா போன்ற கொழுப்பு அதிகமுள்ள உணவால் உடல் எடை அதிகரித்து விடுகிறது…. உடல் எடை முதுமைத் தோற்றத்தைத் தருவதோடு சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட தடையாக உள்ளது.

        ஒரே இடத்தில் உட்கார்ந்தே வேலையில் ஈடுபடுவோர் அதிகம்உடற்பயிற்சி, நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், விளையாட்டு என உடல் நலம் சார் பயிற்சிகள்

        அதனால் உடல் எடை அதிகரித்து விடுகிறதுஇன்றைக்கு இளமையாகப் பொலிவாக மெலிந்து கட்டுகுடலுடன் இருப்பவர்களையே பெண்களும் விரும்புகிறார்கள்…..

        நவீன உடற்பயிற்சிக் கூடங்கள் அதிகரித்து விட்டன…. காலைமாலை பெண்கள், ஆண்கள் என்று கூட்டம் அலை மோதுகின்றனஎல்லாம் வருடச்சந்தாஆயுள் சந்தா என்று பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் உடற்பயிற்சி கூடங்கள்கூடவே வேபுரோட்டீன், டயட் அது இதுவென எக்கச்சக்க செலவுகள்ஒரு பக்கம் சம்பாதித்து மறுபக்கம் ஆசையோடு பிரியாணிசிக்கன் சாப்பிட்டு நாக்கு ருசிக்குத் தீனி போட்டவர்கள் இப்பொழுது உடலின் எடையால் சின்ன வயதிலே மாரடைப்புரத்த அழுத்தம் என அல்லல்படுகின்றனர்….இவை எல்லாவற்றையும் சல்லிக்காசு இன்றிசாதாரணமாக நம் உடலை மெலிய வைக்கிற ஆற்றல் அருகம்புல்லிற்கு இருக்கிறதுஅதனால் தினம் அருகம் புல் சாறு எடுத்துப்பருகி வந்தால் எடை குறைவதோடு உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து போகும். உடலும் பார்க்கத் தூண்டும் வகையில் மெலிதாக லட்சணமாக மாறும் இதுமட்டுமின்றி பல், கண், காசு, மூக்கு, தோல், ஆஸ்துமா, மாதவிடாய், சர்க்கரை நோய்களுக்கும் தினமும் நாம் அருகம்புல் சாரை அருந்தி வந்தால் ரத்தப்போக்கு சீராகும்உடல் உறுப்புகளில் ஏற்படும் புண் போன்றவற்றை கிருமி தொற்றிலிருந்து பாதுகாக்கவும் அருகம்புல்சாறு மிகுந்த பலனளிக்கிறது.

       இன்றைக்கு ரசாயணம் கலக்காத காய்கறிகள், பழங்கள் தானியங்கள் வாங்க மக்கள் முன்வந்துவிட்டார்கள் என்று முழுமையாகச் சொல்ல முடியாது

 

Tags :

Share via