சின்ன சின்ன செய்திகள்..

by Editor / 20-11-2021 06:51:17pm
 சின்ன சின்ன செய்திகள்..


ஆந்திராவில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டையில், சத்யவதி நதியின் அருகே நந்தலூரில் 3 அரசு பஸ்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன. இதிலிருந்து 12 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். திருப்பதி, நெல்லூரில் மேலும் 5 பேர் என மொத்தம் 17 பேர் வெள்ளத்தில் சிக்கியும் மின்சாரம் தாக்கியும் இறந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோரை காணவில்லை.


கருர்  17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் வெங்கமேடு காவல்துறை  ஆய்வாளர் கண்ணதாசன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் காவல்துறை திருச்சி மண்டல துணை தலைவர் சரவண சுந்தர் உத்தரவு.


மதுரை அம்மா உணவகத்தில் கருணாநிதி படத்தை உள்ளூர் பிரமுகர்கள் சேர்த்துள்ளார்கள். இந்த படம் வைக்கப்பட்டது குறித்து எங்களுக்கு தகவல் தெரியாது. படத்தை வைக்க அரசு தரப்பில் எந்த அறிவுறுத்தலும் கிடையாது. இது குறித்து விசாரணை நடத்தப்படும்.- மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திக்கேயன் விளக்கம்


.தேனி மாவட்டம் தும்மக்குண்டு கிராம ஊராட்சித் தலைவரும், திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளருமான சின்னக்காளைதிமுக அரசைக்கண்டித்து திமுக கிராம ஊராட்சித் தலைவர் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தீக்குளிப்பேன் என ஆவேசம்.


திட்டக்குடி அடுத்த ராமநத்தம் பேருந்து நிலையத்தில் ஜெய்பீம் படத்திற்கு எதிராக பாமகவினர் சூர்யாவின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம், சூர்யாவையும்,ஜோதிகாவையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தல்.


ஆந்திர மாநில தொடர் மழை காரணமாக பிச்சாட்டூர் அணையிலிருந்து ஆரணி ஆற்றில் வினாடிக்கு 2400 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர் தற்போது 1000 ஆயிரம் கன அடியாக குறைப்பு ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 2000 கனஅடியாக வந்து கொண்டு இருக்கிறது இதனால் ஆரணி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.


அதிமுக அரசின் அம்மா மருந்தகம் உள்ளிட்ட பல மக்கள் நல திட்டங்களுக்கு நிதி நெருக்கடியை காரணம் காட்டி திமுக அரசு மூடு விழா நடத்துவது கண்டிக்கத்தக்கது-- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 


உள்துறை சார்பில் ரூ 44.30 கோடி மதிப்பீட்ட்டில் கட்டப்பட்ட காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்கள், காவல் துறைக் கட்டடங்கள், உதவி சிறை அலுவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரூ 3.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத் தளத்துடன் கூடிய அலுவலக கட்டடத்தினை முதலமைச்சர் திறந்து வைத்தார்.


 

 சின்ன சின்ன செய்திகள்..
 

Tags :

Share via