இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர பாஜக முயற்சி செய்துவருவதாக திருமாவளவன் குற்றச்சாட்டு:

by Editor / 23-12-2021 06:12:16pm
இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர பாஜக முயற்சி செய்துவருவதாக திருமாவளவன் குற்றச்சாட்டு:

தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி பேட்டி:மத்திய அரசு திருமண வயதுக்கான சட்டத்தை 21 வயதாக திருத்தியுள்ளது. இது பொது சிவில் சட்டத்தை கொண்டு வரும் முயற்சி. இது மதசாா்பின்மை கோட்பாட்டிற்கு எதிரானது. சாதி மறுப்பு திருமணத்தை எதிா்பவா்கள் இதனை வரவேற்கின்றனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதேர்தல் சட்ட திருத்த மசோதாவில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது என்பது  தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்காதவா்களின் வாக்குகளை செல்லாத வாக்காக மாற்றுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.தமிழ்நாடு பாடநூல் கழகம் புத்தகங்களை அண்டை மாநிலங்களில் அச்சடிக்கும் முயற்சியை கைவிட்டு தமிழக்திலே அச்சடிக்கும் என்று நம்புகிறேன்.சிங்கள ராணுவம் தமிழக  மீனவர்களை கைது செய்வது தொடர்கிறது. இதில்  மத்திய அரசு மெளனம் காப்பது  வருத்தமளிக்கிறது. பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருவது கிடையாது. நாடாளுமன்றத்தை மதிப்பது கிடையாது என்றார்.

 

Tags :

Share via