திருவான்மியூர் பறக்கும் இரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் டிக்கெட் கவுண்டர் ஊழியரை கட்டிப்போட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

by Admin / 03-01-2022 02:33:36pm
 திருவான்மியூர் பறக்கும் இரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் டிக்கெட் கவுண்டர் ஊழியரை கட்டிப்போட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. திண்டுக்கல்லில் மீன்பிடி குத்தகை தொடர்பான தகராறில் நேற்று இரவு நாட்டு துப்பாக்கியால் ராகேஷ் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களை 5 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகரான சென்னையில் ஆட்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் பறக்கும் இரயில் நிலையத்தில் இன்று துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவான்மியூரில் அதிக நடமாட்டம் இருக்கும் பரக்கும் இரயில் நிலையத்தில் அதிகாலையில் டிக்கெட் கவுண்ட்டருக்குள் நுழைந்த மர்ம கும்பல், துப்பாக்கியைக் காட்டி ஊழியரைக் கட்டி போட்டுள்ளனர். பின்னர் சாவகாசமாக அங்கிருந்த 1.32 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்து சென்றனர்.
 
தலைநகர் சென்னையில் அதுவும் புறநகர் ரெயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் நடந்த இக்கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் ரெயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆட்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் பறக்கும் ரெயில் நிலையத்தில் சிசிடிவி கேமாரா இல்லாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பணக் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும், பறக்கும் இரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் டிக்கெட் கவுண்டர் ஊழியரை கட்டிப்போட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via