ஜெர்மனியில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்படலாம்!

by Editor / 06-05-2021 09:47:16am
ஜெர்மனியில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்படலாம்!

ஜெர்மனியில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு விதிகளை தளர்த்த அரசு ஆலோசித்து வருகிறது.

உலகெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதில் ஐரோப்பிய நாடுகளில் பல பாதிக்கப்பட்டுள்ளன . இதில் ஜெர்மனியும் ஒன்றாகும். இங்கு இதுவரை 34.69 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். இதையொட்டி இங்கு ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு ஆகியவை கடுமையாக்கப்பட்டுள்ளன. இதில் 1 லட்சம் பேர் உள்ள இடங்களில் 100க்கு அதிகமானோர் பாதிப்பு அடைய நேர்ந்தால் இந்த கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இவ்வாறு ஹாம்பர்க், லோயர் சாக்சோனி, மற்றும் ஹோல்ஸ்டன் ஆகிய மாநிலங்களிலும் தலைநகரிலும் கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இங்குக் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக 16 மாநிலங்களில் முன்பைவிட பன்மடங்கு அதிகரித்துள்ளது. நேற்றைய பாதிப்பு 21 ஆயிரத்தை தாண்டி இருந்தாலும் இதற்கு முந்தைய வாரத்தை விடத் தினசரி பாதிப்பு 4000 குறைந்துள்ளது. பல இடங்களில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 100க்கும் குறைவானவர்களே பாதிக்கப்படுகின்றனர். எனவே ஜெர்மனியின் பல மாநில மக்களும் கொரோனா பாதிப்பு குறைவதால் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்படும் என ஆவலில் உள்ளனர். அரசு தரப்பில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via