விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிய 547 வாகனங்களை காவல் துறையினரால் பறிமுதல்

by Admin / 07-01-2022 12:25:42pm
விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிய 547 வாகனங்களை காவல் துறையினரால் பறிமுதல்

சென்னையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதைக்கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.சென்னை மாநகராட்சியும் வீடுவீடாகச்சென்று கொரோனா பாதிப்படைந்தவர்களைக்கண்டறிந்து வருகின்றனர்.ஆம்புலன்ஸ் சேவையையும் தொடங்கியுள்ளது.தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை இன்றிலிருந்து அமுல்படுத்துகிறது.சென்னையில் மாநகர காவல் துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.சென்னையில் இரவு நேர ஊரடங்கிற்காக 10,000போலீஸார் பணியில் ஈடுபடஉள்ளதாகவும் 499 தடுப்புகள் வைத்து காவல் பணி மேற்கொள்ளப்படும்என்றும்அத்தியாவாசிய பணி அன்றி வெளியில் செல்லக்கூடாது.மருத்துவம் சார்ந்த பணிக்காகச்செல்வோர் கண்டிப்பாக அடையாள அட்டை வைத்து கொள்ளவேண்டும் என்று பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சிங் தெரிவத்துள்ளார்.

சென்னையில் நேற்று இரவு நேர ஊரடங்கு அமுலானதை அடுத்து  விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிய 547 வாகனங்களை காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. 501 இரு சக்கரவாகனங்கள் ,32 ஆட்டோ, 14 இலகு ரக வாகனங்கள்அடங்கும்.

 

 

Tags :

Share via