வேகமெடுக்கும் கொரானா - பிரதமரின் புதுச்சேரி வருகை ரத்து.

by Writer / 07-01-2022 03:43:26pm
வேகமெடுக்கும் கொரானா - பிரதமரின் புதுச்சேரி வருகை ரத்து.

பிரதமர் நரேந்திர மோடியின் புதுச்சேரி வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 12ம் தேதி புதுச்சேரியில் நடக்கும் தேசிய இளைஞர் தின விழாவில் மோடி நேரில் பங்கேற்காமல் காணொலி காட்சி மூலம் பங்கேற்பார் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் அகில இந்திய இளைஞர் திருவிழா வருகிற 12-ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 7500 இளைஞர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து இளைஞர்களிடம் பேசுவார் எனவும் அறிவிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றின் மூன்றாவது அலை மற்றும் ஓமிக்ரான் தொற்று காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் வார இறுதி ஊரடங்கு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் புதுச்சேரியில் தொற்று பாதிப்பு கடந்த நில நாட்களாக கணிசமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பிரதமர் மோடியின் புதுச்சேரி நிகழ்ச்சி ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின.


இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் நீடித்து வந்தது. இந்த நிலையில் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிரதமர் புதுச்சேரியில் நடைபெற உள்ள தேசிய இளைஞர் தின விழாவில் பங்கேற்க மாட்டார் என கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் பிரதமர் நரேந்திர மோடியின் புதுச்சேரி வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 12-ஆம் தேதி புதுச்சேரியில் நடக்கும் தேசிய இளைஞர் தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பங்கேற்க மாட்டார் என கூறியுள்ளார். மேலும் டெல்லியில் இருந்தவாறு காணொலிக் காட்சி மூலமாக தேசிய இளைஞர் தின விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்து இளைஞர்களிடையே உரையாற்றுவார் என்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

வேகமெடுக்கும் கொரானா - பிரதமரின் புதுச்சேரி வருகை ரத்து.
 

Tags :

Share via