புல்லட் சாயலில் புதிய ஜாவா பைக்

by Staff / 24-11-2018
புல்லட் சாயலில் புதிய ஜாவா பைக்

இந்தியர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல் மீண்டும் களமிறங்க இருக்கின்றன.

புல்லட் சாயலில் புதிய ஜாவா பைக்

புதுப்பொலிவுடன், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் வர இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.ஜாவா பிராண்டில் மொத்தம் 4 புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் வர இருக்கிறது. சட்டென பார்க்கும்போது, இது ராயல் என்பீல்டு புல்லட்டின் சாயலை பெற்றிருப்பதால், ஜாவா மோட்டார்சைக்கிள் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ஹெட்லைட், பெட்ரோல் டேங்க், இன்ஜின் அமைப்பு, மட்கார்டு உள்ளிட்டவை ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளின் சாயலையே பெற்றுள்ளது. எனினும், இருக்கை அமைப்பும், பின்புற மட்கார்டும் மட்டுமே ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு உரிய தனித்துவத்தை பெற்றிருக்கின்றன.