சபரிமலையில் திடீர் மழை ஐயப்ப பக்தர்கள் அவதி

by Editor / 15-01-2022 10:14:22pm
சபரிமலையில் திடீர் மழை ஐயப்ப பக்தர்கள் அவதி

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான கேரளமாநிலம் பத்தினம்திட்டா மாவட்ட பகுதியான சபரிமலையில் மகர விளக்கு ஜோதிதரிசனம் காண நாட்டின் பல்வேறுபகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சென்று 14ஆம் தேதி மாலைவரை சன்னிதானம் உள்ளிட்ட 8 இடங்களில் இலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுநின்று ஜோதி தரிசனம் முடிந்து பின்னர் ஐயப்பசுவாமி தரிசனத்தைக்கண்டு ஊர்திரும்பியவண்ணம் உள்ளனர்.இந்த நிலையில் பொங்கலை பண்டிகைதினத்தன்று சபரிமலைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்றவர்கள் அங்கேயே தங்கியும் உள்ளனர்.இன்றும் ஏரளமான வாகனங்களில் சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்தவண்ணம் இருந்தன.இந்த நிலையில் ஏராளமானோர் இன்னும் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் சபரிமலையில் இன்று திடீரென மாலைப்பொழுதில் பலத்த இடியுடன் கூடிய திடீர் கனமழை பெய்தது.யாரும் எதிர்பாராதவண்ணம் எதிர்பார்க்காத நிலையில் பெய்த இந்த மழையின் காரணமாக ஐயப்ப பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சபரிமலையில் திடீர் மழை ஐயப்ப பக்தர்கள் அவதி
 

Tags :

Share via