ரயில்வே நிர்வாகம் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களில் "க்யூ ஆர்" குறியீட்டு படத்தை ஸ்கேன் செய்து பயணச்சீட்டு பெறும் வசதியை ஏற்படுத்தியுள்ளது

by Editor / 12-02-2022 05:57:12pm
ரயில்வே நிர்வாகம் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களில்

பணமில்லா பரிமாற்றங்கள் மற்றும் மின்னணு பணம் செலுத்தும் முறைகளை ஊக்குவிப்பதற்காக, தெற்கு ரயில்வே நிர்வாகம் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களில் "க்யூ ஆர்" குறியீட்டு படத்தை ஸ்கேன் செய்து பயணச்சீட்டு பெறும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதன் மூலம் பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களில் சீசன் டிக்கெட்டுகளையும் புதுப்பித்துக் கொள்ளலாம். பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் மூலமாக அடிக்கடி பயணச்சீட்டு பெறுவதற்காக  ஸ்மார்ட் கார்ட்கள் வழங்கப்பட்டு வருகிறது.  இந்தக் கார்ட்களுக்கான  பண மதிப்பை   பற்று வைப்பதையும் பயணச் சீட்டு இயந்திரத் திரையில் தோன்றும் "க்யூ ஆர்" கோட் பயன்படுத்தி செய்து கொள்ளலாம். ஸ்மார்ட் கார்டு வாயிலாக இயந்திரங்களில் பயணச்சீட்டு பெறுவதும் தொடர்கின்ற நிலையில் இந்த "க்யூ ஆர்" கோட் பயன்பாடு விரைவாக பயணச்சீட்டு பெறவும், தங்கு தடை இல்லா எளிதான பணபரிமாற்ற மற்ற பரிவர்த்தனைகளுக்கும் வழிவகுக்கும். தானியங்கி பயணச் சீட்டு இயந்திரத்தில் முதலில் பயணிகள் தங்கள் பயண விபரங்களை பதிவு செய்ய வேண்டும். உடனே திரையில் 3 வழிமுறைகள் தோன்றும். அவை ரயில்வே ஸ்மார்ட் கார்ட், பேடிஎம் வழியாக பணம் செலுத்தும் பீம் யூபிஐ கியூ ஆர் கோட், ரீசார்ஜ் வழியாக பணம் செலுத்தும்  பீம் யூபிஐ கியூ ஆர் கோட் ஆகிய மூன்று வழிமுறைகளாகும். மேலே குறிப்பிட்ட க்யூ ஆர் கோட் வழிமுறைகளை தேர்வு செய்தால், இயந்திரத்தில் உள்ள திரையில் ஒரு "க்யூ ஆர்" கோட் தோன்றும்.  அந்த க்யூ ஆர் கோட் -ஐ  யூபிஐ பணபரிமாற்ற  வழிமுறைகளான  ஜிபே, பேடிஎம், போன்பே போன்றவற்றின் வாயிலாக ஸ்கேன் செய்து பயணச் சீட்டுக்கான பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்தியவுடன் இயந்திரத்திலிருந்து பயணச்சீட்டு வெளியே வரும். ஸ்மார்ட் கார்டு களுக்கான பண பற்று வைப்பு நடவடிக்கைகளுக்கு, இயந்திரத்திலுள்ள பகுதியில் ஸ்மார்ட் கார்டு வைத்தவுடன் வரும் ஒரு "கியூ ஆர்" கோட் மூலம் தேவையான பண மதிப்பை  ஸ்மார்ட் கார்ட்டுக்கு பற்று வைத்துக்கொள்ளலாம். இந்த எளிதான, வசதியான "க்யூ ஆர்" கோட் பயன்பாடு விரைவான சேவையை வழங்கி பயணிகளின் நீண்ட நேர காத்திருப்பை தவிர்க்கும். இது பற்றிய விளக்கங்கள் மற்றும் மின்னணு பணபரிமாற்ற புகார்கள் ஆகியவற்றை ரயில் மதாத் செயலி மற்றும் ஒருங்கிணைந்த ரயில்வே உதவி எண் 139 ஆகியவற்றில் தெரிவிக்கலாம்.

 

Tags : railway advanced

Share via