வலிமை திரைப்படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு

by Editor / 24-02-2022 07:54:53am
வலிமை திரைப்படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை 100 அடி சாலையில் கங்கா, யமுனா, காவேரி, திரையரங்கம் அமைந்துள்ளது.இந்த திரையரங்கில் நடிகர் அஜீத் நடித்த வலிமை படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இன்று காலை மர்ம நபர்கள் வலிமைதிரைப்படம் வெளியாகியுள்ள  திரையரங்கம்  முன்பாக பெட்ரோல் குண்டு வீசி விட்டுச் சென்றுள்ளனர். இந்த பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் இருசக்கரவாகனம் சேதமடைந்தது. உடனடியாக அங்கு வந்து காந்திபுரம் காவல்துறையினர் திரையரங்கு முன்பு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். எதற்காக இந்த பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்தப் படத்திற்கு வரும் ரசிகர்கள் மத்தியில் பொது அமைதியை  சீர்குலைக்க முயற்சி செய்தார்களா அல்லது தொழில் போட்டி காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா  என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வலிமை திரைப்படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு
 

Tags : Gasoline bombing at the Theater where the strength movie is running

Share via