ரஷ்யாவின் எண்ணெய் எரிவாயு மீதான தடை சாத்தியமே ஜோ பைடன்
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு தடை விதிக்கப்படலாம் என்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரையின் மீதான படையெடுப்பை கண்டித்து அமெரிக்கா ரஷ்யாவின் எரிவாயு மற்றும் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்ககுமா என்ற செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஜோ பைடன் எதுவும் சாத்தியமில்லை என்று கூறமுடியாது.
என்றார் ரஷ்ய போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக என்பது குறித்து இப்போது உடனடியாக முடிவெடுக்க முடியாது என்றும் கூறினார்.
ஆனால் மக்கள்வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் ரஷ்யா குண்டு வீசி அப்பாவிகளை கொன்று வருவதாகவும் தகவல் குறித்து கேள்வி எழுந்தபோது ரஷ்ய ராணுவத்தினர் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது உண்மைதான் என்றும் ஜோ பைடன் குறிப்பிட்டார்
Tags :