மழை வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்13 பேர் பலியாகி உள்ளனர்.

by Admin / 04-03-2022 01:48:10pm
 மழை வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்13 பேர் பலியாகி உள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாமல் கொட்டி தீர்க்கும் இந்த மழையால் விஸ்மோல் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.

பல்வேறு நகரங்களில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல ஊர்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த மழைக்கு இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர்.
 
ஏராளமான வீடுகள் சேதமடைந்து உள்ளன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவ வீரர்கள் போராடி வருகின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் அவர்கள் இரவு- பகலாக மீட்பு பணியில் முழுவீச்சில் ஈடுபடுகின்றனர்.ஆனாலும் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் பொதுமக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

படகுகள் மூலமாகவும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமாகி உள்ளனர். அவர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை. காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. பலர் குடும்ப உறுப்பினர்களை காணாமல் தவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
 

 

Tags :

Share via