தவணை முறையில் பணம் பெற்று மோசடி.

by Admin / 08-03-2022 10:46:44am
தவணை முறையில் பணம் பெற்று மோசடி.

சென்னையில் செயல்பட்டு வந்த தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் பொதுமக்களிடம் தவணை முறையில் பணம் செலுத்தினால் நிலம் வழங்குவதாகக் கூறியுள்ளனர். 

இதனையடுத்து மக்கள் பலர் தவணை முறையில் அதிகளவில் பணம் செலுத்தியுள்ளனர்.
ஆயிரத்து 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறி அந்நிறுவனத்தின் 4 இயக்குநர்களான ஆனா உமா சங்கர், சரவண குமார், அருண் குமார் மற்றும் ஜனார்தனன் ஆகியோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2016 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். 

அதே போல இதே விவகாரத்தில் அமலாக்கத்துறையும் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்து  4 பேரையும் கைது செய்தனர்.
 
அதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் ஜாமீன் பெற்று 4 பேரும் வெளியே வந்த நிலையில், அவர்களது ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 

அதனடிப்படையில் 4 பேரின் ஜாமீனையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், அவர்கள் நான்கு பேரையும் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via