அமமுக பேரூராட்சி தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த ஓ.ராஜா

by Editor / 17-03-2022 02:53:40pm
அமமுக பேரூராட்சி தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த ஓ.ராஜா

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவராக அமமுகவை சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி துணைத்தலைவராக திமுகவைச் சேர்ந்த மணிமாறன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.பழனிசெட்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயந்த் மோசஸ் இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.புதிதாக  பெற்றுக்கொண்ட பேரூராட்சி மன்றத் தலைவர் தலைமையில் முதல்பேரூராட்சி  மன்ற கூட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் நடந்தது.அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பேரூராட்சித் தலைவராக பதவியேற்ற  மிதுன் சக்கரவர்த்தியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் O.பன்னீர்செல்வத்தின் தம்பி O.ராஜா  மிதுன் சக்கரவர்த்திக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் . 
 

 

Tags : O. Raja congratulated the Chairman of the ammk Party

Share via