கோடை விடுமுறை எத்தனை நாட்கள்; பள்ளிகள் திறப்பு எப்போது? - பள்ளிக்கல்வித்துறை தகவல்

by Editor / 02-04-2022 02:59:25pm
கோடை விடுமுறை எத்தனை நாட்கள்; பள்ளிகள் திறப்பு எப்போது?  - பள்ளிக்கல்வித்துறை தகவல்

12ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மே மாதம் 5ம் தேதி தொடங்கி 28ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

அதே போல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரையும் 10ம் வகுப்புகளுக்கு மே மாதம் 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரையிலும் நடக்க இருக்கிறது.

இது தவிர 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13ந் தேதி கடைசி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான (2022-23) அனைத்து வகுப்புகளும் ஜூன் மாதம் 13ம் தேதி தொடங்கும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24-ந்தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு பள்ளி கோடை விடுமுறை காலம் வெகுவாக குறைந்துள்ளது. இதை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

 

Tags : How many days of summer vacation; When are the schools opening? - School Education Information

Share via