ஸ்டாலினுக்காக  தயாராகி வரும் முதல்வர் அறை

by Editor / 06-05-2021 03:36:36pm
ஸ்டாலினுக்காக  தயாராகி வரும் முதல்வர் அறை



தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 234 தொகுதிகளுள் 159 இடங்களை கைப்பற்றி, அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது திமுக. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்க உள்ளார். ஸ்டாலினுடன் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காலை 9 மணிக்கு விழா நடைபெறவுள்ளது.
கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, விழாவில் பங்கேற்க 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஸ்டாலினின் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வரும் அதே வேளையில், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் அறையை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
பெயர் பலகை மாற்றம், வர்ணம் பூசும் பணிகள் உள்ளிட்டவை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கான கண்வாய் வாகனங்கள் ஸ்டாலின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆளுநர் மாளிகையில் பதவியேற்கும் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து தலைமை செயலகம் வந்து புதிய திட்டங்களுக்கு கையெழுத்திடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via