பழமையான கலைப் பொருள்களை இந்தியாவுக்கு அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது.

by Admin / 30-07-2023 09:48:18pm
பழமையான கலைப் பொருள்களை இந்தியாவுக்கு அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது.

 ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று  மான் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் நாட்டு மக்களோடு உரையாடுவது வழக்கம். கிட்டத்தட்ட 103 வது நிகழ்ச்சி  இன்று  நடந்தேறியது .இதில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் பொழுது  சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளை அவர்களுடைய பங்களிப்பையும் நாம் மதித்து சுதந்திரத்தினுடைய மதிப்பை நாம் உணர வேண்டும் என்றும் இந்த தலைவர்களின் நினைவாக நாட்டில் லட்சக்கணக்கான கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கல்வெட்டுகள் நிறுவப்படும் என்றும்அமிர்த கலஸ் யாத்திரை நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்து    7500 கலசங்களில் வரும் மண் மற்றும் மரக்கன்றுகளை இணைத்து தேசிய போர்நினைவுச்சின்னம் வரை எடுத்துச்செல்லும்.. அங்கு  அமிர்த வாடிகை கட்டப்படும். அது பாரதத்தின் மாபெரும் சின்னம் ஆகும். 
 மேலும், இந்த ஆண்டு வெள்ளம் மற்றும் பெருமழையால் பாதிக்கப்பட்ட பல நபர்களின் உயிரை காப்பாற்றியதற்காக தேசிய பேரிடர் மீட்பு வீரர்களைப்பாராட்டுகிறேன்.. யமுனை உள்ளிட்ட பல நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல பகுதிகளில் உள்ள மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்
. மலைப்பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது இதற்கு இடையில் நாட்டின் மேற்கு பகுதியில் விபச்சாய் புயல் சில காலத்திற்கு முன்பு குஜராத்தை தாக்கியது எத்தனை பேரிடர்களுக்கும் மத்தியிலும் நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் கூட்டு முயற்சியின் சக்தியை மீண்டும் ஒருமுறை உணர்ந் துள்ளோம்

.நூற்றுக்கு மேற்பட்ட அரிய மற்றும் பழமையான கலைப் பொருள்களை இந்தியாவுக்கு அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது.இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட இந்த கலைப்பொருள்கள் 2,500 முதல் 250 ஆண்டுகள் பழமையானவை. இந்த அரிய பொருள்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுடன் தொடர்புடையவை என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். இவை டெரகோட்டா ,கல், உலோகம் மற்றும் மரம் ஆகியவற்றை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன .இவற்றில் சில  உங்களை ஆச்சீரியத்தில் ஆழ்த்தும். நீங்கள் அவற்றை பார்த்தால் நீங்கள் மெய் மறந்து போவீர்கள் .இவற்றில் 11 ஆம் நூற்றாண்டின் அழகிய மணல் சிற்பத்தையும் நீங்கள் காணலாம்.. இது ஒரு அப்சரா நடனத்தின் கலை படைப்பு இது. மத்திய பிரதேசத்திற்கு சொந்தமானது. பழைய கலாச்சார பாரம்பரியமான போத் பத்ராவை பாதுகாப்பதற்காக....

உத்தரகாண்ட் பெண்களிடம் இருந்தது எனக்கு பல கடிதங்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு அக்டோபரில் போச் பத்ராவில் ஒரு தனித்துவமான கலைப்படைப்பை எனக்கு வழங்கிய பெண்கள் இவர்கள்தான்.. இந்த பரிசை பெற்றதில் நானும் வியப்படைந்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக பண்டைய காலங்களில் இருந்து நமது வேதங்களும் புத்தகங்களும் உள்ளன. போஜ் பத்ராவில் மகாபாரதமும் எழுதப்பட்டுள்ளது .இன்று தேவர் பூமியை சேர்ந்த இந்த பெண்கள் போஜ் பத்ராவில் இருந்து மிக அழகான கலைப் பொருட்கள் மற்றும் நினைவுப் பொருட்களை தயாரித்து வருகின்றனர். மாணா கிராமத்திற்கு சென்ற போது இந்த தனித்துவமான முயற்சியை பாராட்டினேன். சுற்றுலா பயணிகளிடம் வேண்டுகோள் வைத்திருந்தேன். அவர்களின் வருகையின் போது முடிந்த அளவு உள்ளூர் பொருட்களை வாங்க தேவ பூமிக்கு வருகிறார்கள் அது அங்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது   சுமார் 1.5 லட்சம் கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர் அது அளிக்கப்பட்டுள்ளது 10 லட்சம் கிலோ போதை பொருட்களை அளித்து இந்தியா தனி சிறப்பு வாய்ந்த சாதனையையும் படைத்துள்ளதாக குறிப்பிட்டு பிரதமர் நரேந்திரமோடி பேசினாா்.

 

Tags :

Share via