மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்த தேவ் பட்டாச்சார்யா மருத்துவமனையில் அனுமதி.

by Admin / 30-07-2023 08:58:46pm
மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்த தேவ் பட்டாச்சார்யா  மருத்துவமனையில் அனுமதி.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மேற்குவங்க முன்னாள் முதல்வருமான புத்த தேவ் பட்டாச்சார்யா உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .79 வயதாகும்  அவருக்கு உடல்நிலை பலகீனமானதை அடுத்து மூச்சுத் திணறல் காரணமாகவும் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.. ஒரு மருத்துவ குழு தொடர்ந்து அவருடைய உடல் நிலையை கண்காணித்துக் கொண்டு வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தின் 2001முதல்-2011வரை அதிக காலங்கள்  முதல்வராக பொறுப்பு வகித்தவர் இவர்தான்.இவருக்கு பின்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஆட்சிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

 

 

Tags :

Share via