சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது

by Staff / 07-04-2022 01:29:49pm
 சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது

சீனாவில் கடந்த 2 ஆண்டுகளில் முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது.

அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 20,582 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 2 ஆண்டுகளில் முதல் முறையாக தற்போது சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது.

இதில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 1,383 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 19,199 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,910 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,638 ஆக உள்ளது. அதே சமயம் சீனாவில் தற்போது 24,565 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


  

 

Tags :

Share via