இதுவும் இந்தியாவில் தான்...

by Admin / 01-03-2019
இதுவும் இந்தியாவில் தான்...

இஸ்லாமிய பயங்கரவாதம், முஸ்லிம் தீவிரவாதம் என்னும் வார்த்தை பயன்பாடுகள் அதிகரித்து வரும் சூழலில் நீலகிரி மாவட்டத்தில் 46 ஏழை இந்துக் குடும்பத்தினரின் மணவாழ்க்கை கனவை சத்தமில்லாமல் நனவாக்கியுள்ளனர் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்..

எஸ் ஒய் எஸ் சார்பில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பாடந்துற மர்க்கஸ் வளாகத்தில் 21.2.19 ல் நடைபெற்ற சமூக விவாகம் மெகா நிகழ்ச்சியில் நகர வாடையை நுகராமல் தேயிலை தோட்டத்தில் தினக்கூலிகளாக வேலை செய்யும் ஏழை குடும்பங்களை சேர்ந்த பல்வேறு சமூகத்தின் 400 தம்பதிகளின் திருமணம் இமாம்கள் முன்னிலையில் நடந்தது.. சுமார் 350 முஸ்லிம் குடும்பங்களின் கண்களில் ஆனந்த கண்ணீர் வரவழைத்த இமாம்கள் சகோதர சமூகத்தை சேர்ந்த ஐம்பது குடும்பத்தினர் முகத்திலும் மகிழ்ச்சியை வரவழைத்துள்ளனர்.. பாடந்துற மர்க்கஸ் வளாகத்தில் காந்தபுறம் அபுபக்கர் முஸ்லியார், சையத் இப்ராகிமுல் புகாரி தங்கள், நீலகிரி எம் பி அர்ஜுனன், தமிழக முன்னாள் அமைச்சர் மில்லர் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் முன்னிலையில் முஸ்லிம் இளைஞர்களின் நிக்காஹ் நடைபெற்ற வேளையில், அருகில் உள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் வைத்து 46 இந்துக்கள் மற்றும் தேவர்ஷோலா சி எஸ். ஐ ஆலயத்தில் வைத்து கிறிஸ்தவர்கள் தம்பதியர் ஆனார்கள்... இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு தம்பதிகளின் மணவாழ்க்கை சிறப்பாக துவங்கிட 25000 ரூபாயும், ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் ஐந்து பவுன் தங்க நகைகள் வழங்கப்பட்டது.. சகோதர சமூகத்தை சேர்ந்த தம்பதிகளின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆலிம் பெருமக்கள் மகிழ்ச்சியுடன் உணவு பரிமாறி மணவாழ்க்கை சிறக்க துஆ செய்து வழியனுப்பி வைத்தனர்...

Share via