கடந்த மார்ச் 20ஆம் தேதிக்கு முன்பான கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் 60 நாட்களுக்கு விண்ணப்பம் கோரலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

by Staff / 15-04-2022 12:50:06pm
கடந்த மார்ச் 20ஆம் தேதிக்கு முன்பான கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் 60 நாட்களுக்கு விண்ணப்பம்  கோரலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த 20.03.2022–க்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 60 நாட்களுக்குள் 18.05.2022 தேதிக்குள்) மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
20.03.2022 முதல் ஏற்படும் கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும்.மேற்குறிப்பிட்டுள்ள காலக் கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும்.

 

Tags :

Share via