19.04.2022 ராசி பலன்கள்

by Editor / 18-04-2022 10:50:04pm
19.04.2022 ராசி பலன்கள்

ராசி பலன்கள்

மேஷம்
ஏப்ரல் 19, 2022


எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். அரசு தொடர்பான காரியங்களில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். பயணங்களின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கவும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் :  5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

அஸ்வினி : விவேகம் வேண்டும்.

பரணி : சேமிப்பு குறையும்.

கிருத்திகை : ஆலோசனைகள் வேண்டும்.
---------------------------------------


ரிஷபம்
ஏப்ரல் 19, 2022


கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வாழ்க்கை துணையின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சோர்வு அகலும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

ரோகிணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------


மிதுனம்
ஏப்ரல் 19, 2022


நெருக்கமானவர்களின் எண்ணங்களை அறிந்து விட்டுக்கொடுத்து செல்லவும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த விஷயங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய தன்னம்பிக்கை உண்டாகும். செல்வாக்கு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும். 

புனர்பூசம் : தன்னம்பிக்கை உண்டாகும்.
---------------------------------------


கடகம்
ஏப்ரல் 19, 2022


மனதில் புதுவிதமான ஆசைகளும், இலக்குகளும் பிறக்கும். வாகனத்தை சீர் செய்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உத்தியோக பணிகளில் உழைப்பிற்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கற்பனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

புனர்பூசம் : இலக்குகள் பிறக்கும். 

பூசம் : இழுபறிகள் குறையும். 

ஆயில்யம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
---------------------------------------


சிம்மம்
ஏப்ரல் 19, 2022


எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். பழைய நண்பர்களின் அறிமுகமும், உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள். தாய்வழி உறவினர்களிடம் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை இணைப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : அறிமுகம் கிடைக்கும்.

பூரம் : விவாதங்கள் நீங்கும்.

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------


கன்னி
ஏப்ரல் 19, 2022


எந்தவொரு செயலிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். எழுத்து சார்ந்த துறைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மேன்மையான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.

அஸ்தம் : திறமைகள் வெளிப்படும்.

சித்திரை : புரிதல் உண்டாகும்.
---------------------------------------


துலாம்
ஏப்ரல் 19, 2022


குடும்ப உறுப்பினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். கனிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : மதிப்பு அதிகரிக்கும். 

சுவாதி : அறிமுகம் கிடைக்கும். 

விசாகம் : லாபம் மேம்படும்.
---------------------------------------


விருச்சிகம்
ஏப்ரல் 19, 2022


எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு காலதாமதமாக கிடைக்கும். உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயணம் தொடர்பான விஷயங்களில் மாற்றம் ஏற்படும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

விசாகம் : காலதாமதம் உண்டாகும். 

அனுஷம் : அனுசரித்து செல்லவும்.

கேட்டை : குழப்பம் நீங்கும்.
---------------------------------------


தனுசு
ஏப்ரல் 19, 2022


வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். நன்மையான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : கனிவு வேண்டும்.

பூராடம் : சுதந்திரத்தன்மை அதிகரிக்கும்.

உத்திராடம் : நெருக்கடிகள் நீங்கும்.
---------------------------------------


மகரம்
ஏப்ரல் 19, 2022


கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

திருவோணம் : மாற்றம் உண்டாகும். 

அவிட்டம் : சேமிப்பு மேம்படும்.
---------------------------------------


கும்பம்
ஏப்ரல் 19, 2022


வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்களில் சிறு சிறு மாற்றங்களை செய்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய வீடு மற்றும் மனை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தடைகள் அகலும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

சதயம் : பிரச்சனைகள் குறையும். 

பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------

மீனம்
ஏப்ரல் 19, 2022


மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு பிறக்கும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விவசாய பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். குழப்பம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : தெளிவு பிறக்கும். 

உத்திரட்டாதி : சேமிப்பு குறையும். 

ரேவதி : அனுபவம் உண்டாகும்.

 

Tags :

Share via