உபியில் எஸ் யூவி ரக காரும் பேருந்து மோதி விபத்து 6 பேர் பலி

by Staff / 19-04-2022 03:21:30pm
உபியில் எஸ் யூவி ரக காரும்  பேருந்து மோதி விபத்து 6 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் தியோயாரிவில்  எஸ்யூவி ரக காரும் பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் பலர் காயமடைந்தனர். திருமண சடங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு கௌரி பஜார் சாலை வழியாக காரில் சிலர் பயணித்துள்ளனர் .காளி கோவில் அமைந்துள்ள பகுதியில் சாலையில் சென்றபோது எதிரே வந்த பேருந்து அந்த காரின் மீது பயங்கரமாக மோதியது கூறப்படுகிறது. இதில் பேருந்து ஓட்டுனர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர் தகவலறிந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via