புதுச்சேரியிலும் இந்தி திணிக்கப்படாது;ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

by Admin / 15-05-2022 09:03:59am
 புதுச்சேரியிலும் இந்தி திணிக்கப்படாது;ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற திருமணவிழாவிலே கலந்துகொள்ள வருகைதந்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது:

ஜிப்மரில் பொதுமக்களுக்கான சுற்றறிக்கைகளை தமிழில்தான் முதன்மைபடுத்து வேண்டும் என்று உள்ளது.அதுவும் முதல் வரியில் தமிழ்தான் உள்ளது.ஜிப்மரில் எந்த விதத்திலும் இந்தி திணிக்கப்படவில்லை.ஜிப்மரில் மட்டுமல்ல  புதுச்சேரியிலும் இந்தி திணிக்கப்படாது.யாரும் விருப்பப்பட்டு இந்தி‌கற்றால் யாராலும் தடுக்க முடியாது.

ஜிப்மரில் தொடர்ந்து சில கட்சிகள் போராட்டம் செய்து தொழிலாளர்கள்,நோயாளிகளை தொந்தரவு செய்வது ஏற்றுக்கொள்ள கூடாதசெயல்.

எங்களை விட தமிழ்ப்பற்று உள்ளவர்கள் யாரும் இருக்க முடியாது.தமிழில் பதவியேற்று தமிழில் ஆளுனர் உரை ஆற்றி உள்ளோம்.எப்பொழுதும் நமது மொழி மீது பற்று இருக்க வேண்டும், மற்ற மொழிகள் மீது வெறுப்பு,எதிர்ப்பு இருக்கக்கூடாது.நமது தாய்மொழியை மதிப்பது போல மற்றொருவர் தாய்மொழியையும் மதிக்க வேண்டும்.இதைவைத்து தமிழகத்திலும்,புதுச்சேரியிலும் பிரிவினை ஏற்படுத்தகூடாது என்பது எனது கருத்து,

தமிழ்மொழி தான் நமது தாய்மொழி, மற்றும் தொன்மையான மொழி,வேறொரு மொழியை குறைசொல்வது மூலம்  இன்னொரு மாநிலத்தின் சகோதரத்துவத்தைகெடுக்கக்கூடாது.தமிழ் மொழிதான் உலகின்சிறந்த மொழி அதனை கொண்டாட வேண்டும் என்று ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

Tags : Hindi will not be imposed in Puducherry either; Governor Tamilisai Soundarajan

Share via