இன்று தொடங்குகிறது தென்மேற்குப்பருவமழை

by Editor / 15-05-2022 09:50:37am
இன்று தொடங்குகிறது தென்மேற்குப்பருவமழை

ஆண்டுதோறும் அந்தமானில் மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கமாக இருந்துவருகிறது.கேரளாவில் ஜூன் முதல்வாரத்தில் தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதிக்குபின்னரும் தொடங்குவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இந்தாண்டு  தென்மேற்குப்பருவமழை முன்னதாவே தொடங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி இன்று தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது.தெற்கு அந்தமான் பகுதியில் தொடங்குகிறது.கேரளாவில் வரும் 27ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதாகவும் தகவல்.

 

Tags : Southwest monsoon begins today

Share via