20 அடி ஆழ கால்வாயில் தவறி விழுந்த குழந்தை பாய்ந்து குதித்து காப்பாற்றிய தாய்

by Staff / 27-05-2022 02:45:30pm
20 அடி ஆழ கால்வாயில் தவறி விழுந்த குழந்தை பாய்ந்து குதித்து காப்பாற்றிய தாய்

இங்கிலாந்து நாட்டின் கவுன்டி பகுதியில் 20 அடி ஆழ கழிவுநீர் கால்வாயில் விழுந்த குழந்தையை அதன் தாய் பாய்ந்து சென்று குதித்து காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 23 வயதான இளம்பெண் தனது 18 மாத தன் குழந்தையுடன் சென்று கொண்டிருந்த போது அந்தக் குழந்தை எதிர்பாராதவிதமாக வழியில் இருந்து 20 அடி ஆழ கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தது. இதனை கண்ட அந்த தாய் அதிர்ச்சி அடைந்து பாய்ந்து சென்று கால்வாயில் குதித்து அந்த குழந்தையை பத்திரமாக வெளியே எடுத்தார். 

 

Tags :

Share via