நாயனை கரம்பிடித்த விக்கி
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணத்தை பிரபலங்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் இன்று திருமண பந்தத்தில் இணைந்தனர். மாமல்லபுரத்து அடுத்து வடநெம்மெலி பகுதியிலுள்ள ஷெரட்டன் கிராண்ட் என்னும் கடற்கரை நட்சத்திர விடுதியில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. 15க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க இந்து முறைப்படி 10:25 நயன்தாரா-விக்னேஷ் திருமணம் செய்து கொண்டனர் .திருமணத்திற்கு நடிகர்கள் ரஜினிகாந்த் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் விஜய் சேதுபதி சூர்யா ஜோதிகா கார்த்தி சூர்யா விக்ரம் பிரபு ஜெயம் ரவி ஆகியோர் வருகை புரிந்து மணமக்களை வாழ்த்தினர். கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் நட்சத்திர தம்பதிகள் மணிரத்தினம் சுகாசினி சரத்குமார் ராதிகா இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் கௌதம் வாசுதேவ மேனன் அடுத்து சிறுத்தை சிவா ஹரி தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்களும் நயன்தாரா விக்னேஷ் திருமண விழாவில் பங்கேற்றனர்.
Tags :