மேகதாது அணை பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம்

by Staff / 13-06-2022 05:18:22pm
மேகதாது அணை பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம்

 மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் மேகதாது அணை திட்டத்தின் விரிவான அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்கக் கூடாது என்றும் இதுகுறித்து ஜல்சக்தி அமைச்சகத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மேலும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via