தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக பெய்து வருகிறது.

by Staff / 15-06-2022 01:07:28pm
 தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக பெய்து வருகிறது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரம் தொடங்கும். இந்த ஆண்டு ஜூன் 1-ந் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்தது. அடுத்தடுத்த நாட்களில் மழையின் வேகம் குறைய தொடங்கியது.பின்னர் பல மாவட்டங்களில் மழை பெய்யவில்லை. ஜூன் மாதம் 2 வாரங்கள் முடிந்த நிலையில் தென்மேற்கு பருவமழை அளவு குறித்த விபரங்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. இதில் கடந்த 2 வாரங்களில் இயல்பை விட குறைவாகவே மழை பெய்திருப்பதாக கூறப்பட்டு உள்ளது.கேரளாவில் ஜூன் 1-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை 251.8 மில்லி.மீட்டர் மழை பெய்யும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 108.7 மில்லி.மீட்டர் அளவுக்கே மழை பெய்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் பெய்த மழை அளவை விட மிகவும் குறைவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

 

Tags :

Share via