ருமேனியா பிரதமரை ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி வரவேற்பு

by Editor / 22-06-2022 01:42:12pm
ருமேனியா பிரதமரை ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி வரவேற்பு

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தந்துள்ள ருமேனியா பிரதமர் Nicolae Ciucă ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி உயர்திரு ஷேக் முகமது பின் ஜாயத் அல் நஹ்யான் Qasr Al Bahr அரண்மனையில் வரவேற்றுள்ளார்.

ருமேனியா பிரதமர் மற்றும் அவருடன் வருகை தந்துள்ள அனைவரையும் வரவேற்ற ஜனாதிபதி இருநாட்டு உறவுகள் மேலும் மேம்படும் நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.

இரு நாட்டுத் தலைவர்களும் உலகளவிலான பிரச்சினைகள் மற்றும் பல்வேறு முக்கிய துறைகளில் குறிப்பாக, முதலீடு, வர்த்தகம், மேம்பாடு மற்றும் விவசாயம் ஆகியவற்றில் தங்கள் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

மறைந்த முன்னாள் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி உயர்திரு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு ருமேனிய பிரதமர் தனது இரங்கல் தெரிவித்தார். மேலும், புதியதாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யானுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் அபுதாபியின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via