குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் நீரால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி 

by Editor / 09-07-2022 11:46:31am
குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் நீரால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி 

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது குற்றாலம் இந்த பகுதியை பொறுத்தவரை ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களும் தென் மேற்கு பருவ மழைக் காலம் என்பதால் இங்கு சீசன் காலமாகும் இந்த சீசன் காலங்களில் நாடெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம்  குளிக்க வந்து  செல்வார்கள் கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வருவதற்கும்  அருவியில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது  சாரல்மழை மேற்குதொடர்ச்சிமலைப்பகுதிகளில் நீடித்துள்ளதால் குற்றாலத்தில் சீசன் களைக்கட்டதொடங்கி  உள்ள நிலையில்  அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்பரித்து கொட்டிவருவதால் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதிவருகிறது.அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காதவண்ணம் உள்ளது.போதிய அளவு போலீசார் இல்லாத நிலையும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

 

Tags : Tourists are delighted by the gushing water of the Koorala waterfalls

Share via