அரசியல் கட்சிபிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

by Editor / 30-07-2022 11:52:36am
 அரசியல் கட்சிபிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

 தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் அரசியல் கட்சிபிரதிநிதிகளுடன் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை ஆகியோர் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

 

Tags :

Share via