குற்றாலம்அருவியில் உயிழப்புக்களை தடுக்க தடாகத்தில் வலைப்பின்னல் போன்று லைப்பாய் அமைப்பு

by Editor / 31-07-2022 09:13:14am
குற்றாலம்அருவியில் உயிழப்புக்களை தடுக்க  தடாகத்தில் வலைப்பின்னல் போன்று லைப்பாய் அமைப்பு

தென்காசி மாவட்டமேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குற்றாலம் மெயினருவி,ஐந்தருவி,பழையகுற்றாலம் அருவி,உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இன்று விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.கடந்த சில தினங்களுக்குமுன்னர் வனப்பகுதியில் பெய்த கன மழைகாரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து,தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரின் ஆலோசனைப்படி  தீயணைப்பு துறை மூலமாக சுற்றுலாப்பயணிகளின் தற்காப்புக்காக  தண்ணீரில் மிதக்கக்கூடிய லைப்பாய் அருவியின் நீர் கொட்டும் தடாகத்தில் 18 எண்ணம் வலைப்பின்னல் போன்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சார்பில் அமைத்துள்ளனர். காட்டாற்று வெள்ளம் வந்தாலும் சுற்றுலா பயணிகள் தடாகத்தில் எதிர்பாராத விதத்தில் விழுந்தாலோ வெள்ளத்தில் சிக்கிக் கொண்டாலோ அதைப் பிடித்துக் கொண்டு உயிர் தப்பித்துக் கொள்ளலாம்இதற்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

 

Tags : A system of lifebuoys like a net in the lake to prevent casualties in the Koortalam Mainaruvi

Share via