காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்த உள்ள நிலையில் டெல்லியில் இன்று 144 தடை உத்தரவு

by Editor / 05-08-2022 02:59:05pm
காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்த உள்ள நிலையில் டெல்லியில் இன்று 144 தடை உத்தரவு


இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த உள்ள நிலையில் டெல்லியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த உள்ளதால் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஜந்தர்மந்தரில் தவிர டெல்லியின் மற்ற இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via