ரஜினிகாந்த்-ஆளுநர் தீடீர் சந்திப்பு

by Editor / 08-08-2022 10:05:48pm
ரஜினிகாந்த்-ஆளுநர் தீடீர் சந்திப்பு

புதிய கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்த ரஜினிகாந்த் வரவை ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சட்ட சபை தேர்தலின்போது உடல்நலத்தை காரணம் காட்டி தான் அரசியலுக்கு வரவில்லை என திடீரென்று அறிவித்தார்.இந்த நிலையில் டெல்லிக்கு சென்று திரும்பிய அவர் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப்பேசினார். ஆளுநரை சந்தித்துவிட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆளுநரிடம் அரசியல் பேசியதாவும் ஆனால் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார்.மேலும் செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு அவர் பதில் கூற மறுத்துவிட்டார்.தமிழக முதல்வர்-ஆளுநர் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவும் சூழலில் நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் அதிக பரபரப்பை  உருவாக்கியுள்ளது.

 

Tags : Rajinikanth-Governor Theedir meeting

Share via