82-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை

by Editor / 11-08-2022 09:17:09am
82-வது நாளாக  பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து 82-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via