சச்சின் தெண்டுல்கருக்கு (ஐ .சி. சி.) கவுரவம்

by Editor / 19-07-2019 04:14:28am
சச்சின் தெண்டுல்கருக்கு   (ஐ .சி. சி.) கவுரவம்

        இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐ.சி .சி.) "ஹால் ஆப் பேம் "விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

சச்சின் தெண்டுல்கருக்கு   (ஐ .சி. சி.) கவுரவம்

   சர்வதேச கிரிக்கெட்டில்  சாதனை படைத்தவர்களுக்கு  ஓய்வு பெற்ற பிறகு ஐந்து வருடங்களுக்கு பிறகு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது .

      இதேபோல் தென்ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டு , உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணியில் இடம் பிடித்து இருத்தவீராங்கனை கேத் ரின் பிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது . 'ஹால் ஆப் பேம் ' விருதை பெறும் 6 - வது இந்திய , வீரர் தெண்டுல்கர் ஆவார் . ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த

 • கவாஸ்கர் 
 • பிஷன்சிங் பெடி 
 • கபில்தேவ் 
 • அனில் கும்ப்ளே 
 • ராகுல் டிராவிட்

ஆகியோர் இந்த கவுரவத்தை பெற்றுள்ளனர் .