தாய்மாமான் சீர் ஊர்வலத்தால் திணறிய கடையநல்லூர் சாலை

by Editor / 16-08-2022 11:57:57am
தாய்மாமான் சீர் ஊர்வலத்தால் திணறிய கடையநல்லூர் சாலை

தென்காசி மாவட்டம் மேலக் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினருனுடைய மகள் ஹன்சிகா என்பவருக்கு நேற்று பூப்புனித நன்னீராட்டு விழா மேலக்கடையநல்லூர்  தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதற்காக அவரது தாய்மாமன்கள் சார்பில் கடையநல்லூர் சொக்கம்பட்டி கிராமத்தில் இருந்து 108 வகையான சீர்வரிசைகளை நேற்று 75வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு கண்டெய்னர் லாரியில்  தேசியக்கொடியை  அச்சிட்டு அதன்மீது 108 வகையான  சீர்வரிசைகளையும் 100க்கும்  மேற்பட்ட வாகனங்களில் உறவினர்களோடு தனியார் திருமண மண்டபத்திற்கு ஊர்வலமாக வாணவேடிக்கைகள் முழங்க கொண்டு வந்தனர். இதன் காரணமாக கடையநல்லூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலக்கடையநல்லூர் வழியாக   சீர்வரிசை கொண்டு சென்ற வாகனங்கள் மற்றும் உறவினர்கள் வாகனங்கள் காரணமாக இருசக்கர வாகனங்கள் கூட அந்த பகுதியில் செல்ல முடியாமல் திணறியது.இந்த சடங்கு சீர் வரிசை ஊர்வலத்தை அந்தப் பகுதியை சேர்ந்த  பொதுமக்கள் வியப்புடன்  பார்த்து சென்ற வண்ணம் இருந்தனர்.தாய்மாமன் சீர் ஊர்வலத்தால் கடையநல்லூர்-மதுரை சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பில் பொதுமக்கள் சிக்கினாலும் இந்தப் பகுதியில் இந்த சீர் ஊர்வலம் மக்கள் மத்தியில்  பெருமை பேசும் விதமாக அமைந்தது.

தாய்மாமான் சீர் ஊர்வலத்தால் திணறிய கடையநல்லூர் சாலை
 

Tags :

Share via