அரசு பேருந்துகளில் விளம்பரம் மூலம் வருமானம்

by Editor / 19-08-2022 03:43:48pm
அரசு பேருந்துகளில் விளம்பரம் மூலம் வருமானம்

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது மாநகர பஸ்களின் பின்புறத்திலும், டிரைவர் இருக்கையின் பின்புறத்திலும் மட்டும் விளம்பரம் செய்ய அனுமதி உள்ளது.

இதன் மூலம் குறைந்த அளவிலேயே வருவாய் கிடைப்பதால் மற்ற பகுதிகளிலும் விளம்பரம் செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது. பஸ்சின் 2 பக்கமும், தனியார் விளம்பரம் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் அரசு பஸ்களில் 2 பக்கவாட்டியும் விளம்பரம் செய்யப்படுகிறது. அது போல சென்னை மாநகர பஸ்களில் விளம்பரம் செய்வதன் மூலம் வருவாயை மேலும் அதிகரிக்க முடியும் என கருதுகிறது. அதன்படி 3000 பஸ்களில் விளம்பரம் செய்வதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

 

Tags :

Share via