மதுரை  மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழாமூன்றாம் நாளான இன்று.

by Editor / 25-04-2023 09:23:45pm
மதுரை  மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழாமூன்றாம் நாளான இன்று.

மதுரையில் சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று சுவாமி கைலாச பர்வதம் வாகனத்திலும், அன்னை மீனாட்சி காமதேணு வாகனத்திலும் எழுந்தருளி பரிவார மூர்த்திகளுடன் 4 மாசி வீதிகளிலும் வீதி உலா  பக்தர்களுக்கு அருள்பாலித்தல்

மதுரை  மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத் துடன் கோலாகலமாக தொடங்கியது . விழாவில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் 

சைவத்தையும் வைணவத்தையும் இணைக்கும் விழாவாகவும் மக்களின் ஒற்றுமையையும் , மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் திருவிழாவாகவும் கொண்டாடப்படும் மதுரை சித்திரைத் திருவிழா துவக்க நிகழ்வாக நேற்று முன்தினம் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. 

அருள்மிகு மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் அலங்கரிக்கப்பட்ட தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளியதை தொடர்ந்து  சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வேதமந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்கிட சித்திரை திருவிழா கொடிஏற்றம் கோலாகலமாக நடைபெற்றது.

தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் மீனாட்சிஅம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று சுவாமி சுந்தரேஸ்வரர் கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் மீனாட்சி காமதேனு வாகனத்திலும், 4 மாசி வீதிகளிலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. 

மீனாட்சி- சுந்தரேஸ்வரர் உடன் பரிவார மூர்த்திகளும் 4 மாசி வீதிகளை வலம் வந்தனர். முன்னதாக யானை பார்வதி செல்ல அதற்கு முன்னதாக மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பரதநாட்டியம், சிலம்பம் என சிறுவர்கள் கலை நிகழ்ச்சிகள், மற்றும் அன்னை மீனாட்சி, பார்வதி, சிவன் என வேடங்கள் அணிந்து  சென்றனர்.
 

 

Tags :

Share via