மின் கட்டண உயர்வு பாதிப்புகள் குறித்து கருத்து கேட்பு கூட்டம்.

by Editor / 22-08-2022 08:59:55pm
மின் கட்டண உயர்வு பாதிப்புகள் குறித்து  கருத்து கேட்பு கூட்டம்.

 தமிழகத்தில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக மாதந்தோறும் மின் கணக்கீடு, வீடுகள் தோறும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குதல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருந்தது. இது குறித்து முயற்சிகள் நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த மின்கட்டணம் உயர்வு குறித்து பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேட்க கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் வீரமணி, உறுப்பினர் வெங்கடேசன், சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து மின் கட்டண உயர்வுகள் குறித்து விளக்கப்பட்டது. அதாவது, 200 யூனிட்களுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்தி வருபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27 ம், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றுக்கு ரூ.72 ம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்கள் வரை மின்நுகர்வு செய்யும் 18.82 லட்சம் வீடுகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.147.5 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் தொடரும் என்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் மற்றும் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

 

Tags :

Share via