நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய பா.ஜ.க. எம்எல்ஏ கைது

by Editor / 23-08-2022 03:35:33pm
நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய பா.ஜ.க. எம்எல்ஏ கைது


தெலுங்கானா மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. ராஜாசிங். இவர்தான் பேசும் 10 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதில் அவர் நபிகள் நாயகத்தை பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை ராஜாசிங் எம்.எல்.ஏ. தடுக்க முயன்றார். ஆதரவாளர்கள் 50 பேருடன் சென்ற அவரை போலீசார் தடுத்து நிறுத்தி அழைத்து சென்றனர். அதன் பின் இந்த வீடியோவை அவர் வெளியிட்டார். ராஜாசிங் எம்.எல்.ஏ.வின் இந்த வீடியோவை கண்டித்து ஐதராபாத்தில் நேற்று இரவு போராட்டங்கள் நடந்தது. இந்த நிலையில் ராஜாசிங் எம்.எல்.ஏ.வை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை கட்சியிலிருந்து நீக்கி பாஜக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

 

Tags :

Share via