முதல்வர் முன்னிலையில் 50ஆயிரம்பேர் திமுகவில் இன்று இணைகின்றனர்.

by Editor / 24-08-2022 08:36:45pm
முதல்வர் முன்னிலையில் 50ஆயிரம்பேர் திமுகவில் இன்று இணைகின்றனர்.

கோவை பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற்று வரும் திமுக பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவையில் இருந்து கார் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னதாக பொள்ளாச்சி சென்றடைந்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் திமுகவில் இணைய உள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்ப்பட்டுள்ளது.

 

Tags :

Share via