அரிசி ,பருப்பு கூட ஆன்லைனில் பணம் கட்டி வாங்கலாம்

by Admin / 03-09-2022 09:29:35am
அரிசி ,பருப்பு கூட ஆன்லைனில் பணம் கட்டி வாங்கலாம்


தமிழ் நாட்டிலுள்ள தமிழ்நாடு நுகர்வோர்கழகம்,கூட்டுறவு நியாயவிலை கடைகளின் மூலமாக மக்களுக்குத்தேவையானஅரிசி,பருப்பு,சர்க்கரை,எண்ணெய்,டீ தூள்,கோதுமை உள்ளிட்ட பொருள் களை நியாயவிலை கடைகள் மூலமாககுடும்ப அட்டை த்தாரருக்கு வழங்கப்படுகிறது .இதற்காக காசு கொடுத்து வாங்குவதை எளிமைபடுத்தும் நோக்கில்   கூகுள்பே, பேட்டி எம் ,போன் பே,  யுபிஏ மூலமாக பொருட்களை வாங்கும்  முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது .இதுகுறித்து , கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்ததாவது.;ஒவ்வொரு மாவட்டத்திலும், முதற்கட்டமாக 10 நியாயவிலைக்கடைகளை மாதிரி விலை நியாயவிலைக்கடைகளாகவும் மாற்றநடவடிக்கை மேற் கொள்ளப்படும்.நியாயவிலைக்கடைகளில் 5 கிலோ,2 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் களை விற்க முயற்சிகள் எடுக்கவும் நியாயவிலைக்கடைகளில்அரிசி,பருப்பு,கோதுமை போன்ற உணவுப் பொருள்களை எவர்சில்வர் கொள்கலங்களில் வைத்து விநியோகம் செய்யவும் நடவடிக்கை நேமற்கொள்ளப்படும் என்றார்.

 

 

Tags :

Share via