பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்.

by Admin / 09-09-2022 12:22:20pm
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்.

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்.சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று தங்களைப் புகழ்ந்து கொண்ட பிரிட்டனின் எலிசபெத் அலெக்சாண்ட்ரியா மேரி,1926 ,ஏப்ரல் 21  இல்பிறந்தார்.பிரிட்டன் மகாராணி மரணித்ததை தொடர்ந்து 1952 ,பிப்ரவரி 6இல் இரண்டாவது மகாராணியாக  பட்டம் சூட்டப்பட்டார்.ஆட்சியிலிருந்து அதிகாரம் செய்யும் பதவியன்று .ஆனால் ,இங்கிலாந்து  பிரதமரை தேர்வுசெய்வது அரசிதான் .வின்ஸ்டன்  சர்ஜில் தொடங்கி   இரண்டு நாள்களுக்கு  முன்பு பதவியேற்ற  லிஸ் ட்ரைஸ்   வரைக்கும்  பதினைந்து  பிரதமர்களைத் தேர்ந்தெடுக்க காரணமானவர் .54 நாடுகள் உள்ளடக்கிய காமன் வெல்த்  கூட்டமைப்பிலும்  பதினாறு நாடுகளின் அரசியல்சட்டப்படி ராணியாகவும்  இருப்பவர்.எழுபது ஆண்டுகள் அரசியாக இருந்தவர் .முதலாம் எலிசபெத் அறுபத்து மூன்று ஆண்டுகள் மட்டுமே அதிகபட்சமாக  ஆட்சியில் இருந்தார் .உலகத்தில் நீண்டகால அரசியாக இருந்தவர் என்கிறவரலாற்றிற்கு  உரியவர். தம் 96 வயதில் முதுமை காரணமாக இறந்த இரண்டாம் மகாராணியை அடுத்து அவரது இரண்டாவது மகன் சார்லஸ் முடிசூடி கொள்ளவுள்ளார்.

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்.
 

Tags :

Share via