வட்டி விகிதத்தை 0.7% ஆக உயர்த்தியது எஸ்பிஐ வங்கி- இன்று முதல் அமல்!

by Staff / 15-09-2022 04:37:18pm
வட்டி விகிதத்தை 0.7% ஆக உயர்த்தியது எஸ்பிஐ வங்கி- இன்று முதல் அமல்!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி பிஎல்ஆர் எனப்படும் பிரதான வட்டி விகிதத்தை 0.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதுவரை 12.75 சதவீதமாக இருந்த பிரதான வட்டி விகிதம் 0.7% உயர்வின் காரணமாக 13.45 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேபோல் அடிப்படை வட்டி விகிதத்தையும் 8 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாக பாரத் ஸ்டேட் வங்கி உயர்த்தியுள்ளது. இதனால் அடிப்படை விகிதத்தில் கடன் வாங்கிய கடனாளிகளுக்கு EMI தொகை உயரும். வட்டி விகிதத்தை உயர்த்தியதால் வீடு, வாகனக்கடன், தனி நபர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வட்டி விகித உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

 

Tags :

Share via